

பெ.சீனிவாசன்
ஈரோடு மாநகர துணை அமைப்பாளர், தி.மு.க இளைஞர் அணி, ஈரோடு தெற்கு மாவட்டம்.
இளைஞர் சக்தியே! வெல்லும் சக்தியே!
தளபதியின் வழியில்… சின்னவரின் தலைமையில்!
வணக்கம். நான் பெ. சீனிவாசன். சமூக நீதியின் தொட்டிலாம் ஈரோடு மண்ணில் பிறந்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டவன். தற்போது ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணியின், ஈரோடு மாநகர துணை அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறேன்
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ நல்லாட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது முதன்மையான பணி. இளைஞர் அணிச் செயலாளர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாநகரத்தில் இளைஞர் அணியை ஒரு எஃகு கோட்டையாக மாற்றுவதே என் இலக்கு.
மக்கள் நலம்|களப்பணி
ஈரோடு மக்களுக்கான பணிகள்

மாநில இளைஞர் அணி மாநாடு
சின்னவருடன் நாங்கள்”
இது தளபதியாரின் வழியில் சின்னவர் தலைமையில் நாங்கள் பயணிக்கத் தயார் என்பதற்கான ஒரு உறுதிமொழி! , எங்கள் அரசியல் பயணத்தில் மறக்க முடியாத நினைவு லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடி, ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தை முன்னெடுத்தது, இந்திய ஒன்றியத்திற்கே ஒரு பாடம்.

இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை
சமூக நீதியைக் காக்கவும்,மாண்புமிகு இளைஞர் அணிச் செயலாளர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தவும், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணியில் இணைய உங்களை அழைக்கிறோம். இது வெறும் உறுப்பினர் சேர்க்கை அல்ல; இது ஒரு இனமானப் படைக்குத் ஆள் சேர்க்கும் அழைப்பு!

ஈரோடு மகளிர் அணி மாநாடு
திராவிட மாடல் அரசின் மணிமகுடமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மற்றும் ‘விடியல் பயணம் (இலவசப் பேருந்து)’ திட்டங்களால் பயனடைந்த பெண்கள், தங்கள் நன்றியைத் தெரிவிக்கவே இந்தக் கூட்டத்திற்கு அலைகடலெனத் திரண்டிருந்தனர். பெண்களைச் சமூகத்தின் அதிகார மையமாக மாற்றிய பெருமை நம் கழகத்தையே சாரும்.”

திராவிட மாடல்
பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு சிலரை மட்டும் சென்றடைவது அல்ல; அது கடைக்கோடி மனிதனுக்கும் பயன்படுவதே உண்மையான வளர்ச்சி. சமூக நீதியையும், பொருளாதார வளர்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு செயல்படுவதே மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு.

மக்கள் நல திட்டங்கள்
இந்தியாவின் வழிகாட்டி!ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல்! மாண்புமிகு முதல்வர் அவர்களின் சாதனைத் திட்டங்கள்
- காலை உணவுத் திட்டம்: பசியில்லா வகுப்பறைகள்.
- மகளிர் உரிமைத் தொகை: பெண்களின் கையில் அதிகாரம்.
- மக்களைத் தேடி மருத்துவம்: வாசல் தேடி வரும் நலம்.
- நான் முதல்வன்: உலகை வெல்லும் இளைஞர்கள்.

இளைஞர் அணி மாநாடு ஈரோடு
ஈரோடு என்றாலே அது புரட்சி மண். தந்தை பெரியார் நடந்த அந்தத் தெருக்களில், மீண்டும் ஒரு புரட்சி அலை வீசியதை கடந்த வாரம் பார்க்க முடிந்தது..திரு. பெ. சீனிவாசன் அவர்களின் தலைமையில், ஈரோடு தெற்கு மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்து இளைஞர்கள் அலைகடலெனத் திரண்டு வந்தனர்.
CONTACT FORM
திராவிட மாடல்|மக்கள் நலத் திட்டம்
திராவிட முன்னேற்றக் கழகம்

காலைஉணவு திட்டம்
பசியில்லா வகுப்பறைகள்!

நான்
முதல்வன்
திறமை செழிக்கும் தமிழ்நாடு!

மகளிர்உரிமை
பெண்ணின் கையில் அதிகாரம்!

விடியல் பயணம்
திறமை செழிக்கும் தமிழ்நாடு!

புதுமைப்பண்
பெண் கல்வியின் பொற்காலம்!

இன்னுயிர் காப்போம்
உயிர் காக்கும் மனிதநேயம்!

மருத்துவம்
வாசல் தேடி வரும் நலம்!

தமிழ்ப் புதல்வன்
வெல்வோம் இனி உலகை!
